பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நயமான பேச்சு 41 இந்த இ ன் பங் கி ைட த் த து. நீ வேண்டுமென்று விரும்பினால், உனக்குக் கிடைக்காத இன்பமும் உண்ட்ோ?” என்று கேட்கிருள். இதில் குறிப்பாகத் " திருமணம் செய்துகொள் ” என்ற கருத்து கலந்திருப் பது கவனிக்கத்தக்கது. " தினேயும் அறுவடையாகி விட்டது” என்ற குறிப்பையும் தருகிருள். இதனுல் அவள் தினேப்புனங் காவுலுக்குச் செல்ல நேரிடாதென்பதையும் ஆதலால் அவளே இனிமேல் பகற்காலத்தில் பார்க்கமுடியாதென் பதையும், அவளே வீட்டை விட்டு வெளிச்செல்லக் கூடாதென்று பெற்ருேர் கட்டுப்படுத்தியிருப்பதையும் குறிப்பாக உணர்த்துகிருள். ' இனிமேல் நீ இரவில் வருவதைத் தவிர வேறு வழியில்லே. அதுவும் காவலாளர்கள் அயர்ந்து தாங்கும் நேரம் பார்த்துத்தான் வரவேண்டும்” என்று இரவுக் குறியை நேர்கின்ருள். அவன் இனிமேல் இரவில்தான் வரவேண்டும்’ என்று பகற்களு காண்கிருன். அவன் கனவில் ஆழ்ந்திருக்கையில், நிறைமதி யம் நாள் நெருங்கி விட்டது” என்ற புதிர் விடுகிருள். இதனுல் ' இரவில் வருவதும் முடியாத காரியம், ஏனெனில் இது மணம் செய்யவேண்டிய நாள். பலர் திருமணத்திற்குப் பெண் கேட்கும் நாள். ஆகவே விரைவாகக் கல்யாணம் செய்துகொள் ” என்று நயமாக உணர்த்துகின்ருள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/59&oldid=781708" இலிருந்து மீள்விக்கப்பட்டது