பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரியான சூடு அக்காலத்தில் இப்போதுள்ள மதுரையில் இருந்த சங்கத்திலிருந்துகொண்டு எத்தனையோ புலவர் கள் தமிழை ஆராய்ந்து வந்தார்கள். பிற்காலத்தில் தோன்றிய ஒரு சில புலவர்களைப்போலத் தாம் பெறும் பரிசல்களுக்காகப் பாடும் குணம் அவர்களிடம் இல்லை. போற்றினும் போற்றுவர், பொருள் கொடா விடில் துாற்றினும் துாற்றுவர்' என்ற கூற்று பிற்காலத் தில் தோன்றிய ஒருசில புலவர்களால் உண்டாயிற்று எனக்கூறலாம். பண்டைய புலவர்களைப்போல, கெஞ்சு உரம் இல்லாத காரணத்தாலோ, வேறு என்ன கார, ணத்தாலோ பிற்காலத்திலுள்ளவர்கள் - அதுவும், ஒரு சிலர்தான்-இம்மாதிரி நடந்துகொண்டார்கள். ஆனல், பண்டைப் புலவர்கள் வாணிகப் புலவர் கள் அல்ல; தாம் பெறும் பொருளுக்காகப் பாடும் வழக்கம் அவர்களிடம் ஒரு சாளும் இல்லை. தங்கள். குடும்பச் செலவிற்கு வேண்டியவற்றை வேறு வகை யாகச் சம்பாதித்துக்கொண்டு வாழ்ந்தார்கள். பெரும் பாலான காலத்தை சங்கத்திலிருந்துகொண்டு தமிழ் நூல்களே ஆராய்ந்துகொண்டும், தமிழ்ச் சுவையை தகர்ந்து இன்புற்றும் வாழ்ந்து வந்தார்கள். இன்னும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/62&oldid=781716" இலிருந்து மீள்விக்கப்பட்டது