பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரியான சூடு 47 கண்டு, o ,ே கின்பால் வந்து யாசிக்கும் புலவர்களைப் பாதுகாப்பவர்கள் இல்லாமற் போகவும் இல்லே, பெருங் தன்மை வாய்ந்த வள்ளல்களும் உலகத்தில் இருக்கிருர் கள் என்பதை அறிவாயாக! நினது ஊர்க்காவல் மரத் தில் யான் கொண்டுவந்து கட்டியுள்ள சிறந்த யானேயா னது யான் ஒரு வள்ளலிடம் பெற்ற பரிசிலாகும். இள வரசனே, யான் போய் வருகிறேன்” என்று கூறி அவனுக்கு அறிவு கொளுத்தினர் புலவர். இவ் வரலாற்றைக் கூறும் பாடல் வருமாறு: இரவலர் புரவலே நீயும் அல்ல; புரவலர் இரவலர்க்கு இல்லேயும் அல்லர்; இரவலர் உண்மையுங் காண்இனி நின்ஊர்க் கடிமரம் வருந்தத் தந்துவம் பிணித்த நெடுநல் யானை எம் பரிசில் கடுமான் தோன்றல்! செல்வல் யானே ’ -பு:தானு று, 182, ! இரவலர் - யாசிப்பவர்; புரவலே பாதுகாத்தலே கடுமரம் - ஊர்க்காவல் மரம்; பிணித்த கட்டியுள்ள கடுமான் தோன்றல் - விரைந்த குதிரையை யுடைய தலைவன்ே; செல்வல் - போகின்றேன் ! உலோபக் குணமுள்ள வெளிம்ானது தம்பிக்குப் புலவர் கொடுத்த குடு, அவரது உள்ள மாட்சியினைக் காட்டுவதோடன்றி, நமக்கும் வியப்பை உண்டாக்குகிற தல்லவா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/65&oldid=781723" இலிருந்து மீள்விக்கப்பட்டது