பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கள்வன் மகன் 55 செய்தன. தான் ஒரு பெரிய மனிதன், கல்யாண்ம் செய்துகொண்டு குடும்பம் நடத்துபவன் -என்றெல் லாம் தன்ன்ப்பற்றி கினைத்துக்கொண்டான், பெண் பிள்ளை களது விளையாட்டிலும் கலந்துகொள்ள எண்ணினன். " நாம் இரண்டு பேரும் கல்யாணம் செய்து கொண்டு தனி வீட்டில் வாழலாம். இந்தக் கூரை யில்லாத வீடு மக்கு வேண்டாம்” என்ருன் அவளை நோக்கி. " இரு இன்றைக்கு உன் பாட்டியிடம் சொல்லி உனக்கு உதை வாங்கித் தருகிறேன்" என்ருள் அவள். ' கணவனுக்கு மீறி நடப்பாயோ?” என்று குறும்பாகப் பேசினுன் அவன். இப்படியாக அவன் விளையாட்டைத் தொடங்க ஆரம்பித்தான். எல்லோரும் அவனே முட்டாள் பயலே, உனக்கு எப்போதும் இதுதான் பேச்சு " என்று அவனைத் திட்டினர்கள். எல்லாப் பெண் பிள்ளைகளுக்கும் முன்ஞ்ல் தன்னமனைவி முறை கூறி அழைத்தது அவளுக்குக் கோபத்தை உண்டாக்கிற்று. இரு கையாலும் மண்ணே வாரி அவன்மீது கொட்ட வந்தாள். துள்ளிக் குதித் தான் அவன். சட்டென்று அவளது கைகளைப்பிடித்து மண்ணைக்கொட்டும்படி செய்து அவளது தலையிலுள்ள பூவைப் பிடுங்கினன்: பக்கத்திலிருந்த வேருெருத்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/73&oldid=781741" இலிருந்து மீள்விக்கப்பட்டது