பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 கவிஞன் உள்ளம் பேணியைக் கவனித்துப் பார்த்தால் மனிதனுடைய குழந்தைப் பருவம்தான் மிகுதியாகவிருக்கிறது. ஏனேய உயிர்கள் தம் பெற்ருேர்களிடமிருந்து உயிர் வாழ்வ தற்குப் போதுமான சிறிது அறிவைப் பெறுகின்றன: மிக விரைவிற் பெறுகின்றன. நெடுங்காலமாக இவை கள் இதற்குமேல் முன்னேருது இப்படியே காலங் கழிக்கின்றன. ஆனால் மனிதன் அப்ப்டி அல்லன். தனது மூதாதையர் தங்கள் அனுபவத்தையெல்லாம் எழுதிவைத்துப்போன நூல்களைப் படிக்கவேண்டிய வகை விருக்கின்ருன். சிக்கலான உலக வாழ்க்கைக்குத் தன்னைத் தகுதி செய்துகொள்ள இவ்வனுபவத்தை யெல்லாம் மனிதன் தெரிந்துகொள்ள வேண்டியிருக் கிறது. தவிரவும், மெய்யுணர்தற்றுறையிலும் மனிதன் முன்னேற இடம் இருக்கிறது. இவற்றை யெல்ல்ாம் அறிந்துகொள்வதற்குப்போதிய காலம்வேண்டியிருப்பு தால் மனிதனுடைய குழந்தைப் பருவம் மிகுதியாக யிருக்கிறது என்று நினைக்கவேண்டியிருக்கிறது. உலக வாழ்க்கையை வெற்றியுற நடத்துவதற்கு மொழி அறிவு இன்றியமையாதது என்பது உலகிய லறிஞர்கள் கன்கு அறிவார்கள். பொறிகளால் அனுப விக்கும் இன்பத்திற்குத் தாங்கியான பொருளைத் திரட்டுவதற்கு மொழி அறிவு ப்ோதுமானது. அறிவிற்கு விருந்தாக விருக்கும் இலக்கியத்தை அறிந்துகொள்வதற்கு மொழி அறிவு மட்டிலும் போதாது நல்ல பயிற்சி பெற்ற இலக்கிய அறிவு : இன்றியமையாதது. பொருள் இருக்கும் வரையில் தர்ன் பொறிகருவியாக இன்பத்தை நகரலாம்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/92&oldid=781781" இலிருந்து மீள்விக்கப்பட்டது