பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவு வேட்கை 75 பொருளற்ற நிலையில் அதன் காரியமாகிய இன்பத்தை இழந்து வருந்தும் கிலேயேற்படும். அறிவு கருவியாக அடையும் இலக்கிய இன்பம் எப்போதும் குறையாது. வருத்தப்படவேண்டிய பிரிவு அதற்கு இல்லை என்பது திண்ணம். தவிரவும், பொருளால் உண்டாகும் இன்பம் வளர வளர அதற்குக் காரணமாக விருக்கும் பொருள் சுருங்கிக் கடைசியில் இல்லையாய்விடும்; அறிவால் படைக்கும் இன்பம் வளர வளர அதற்குக் காரண மாகிய அறிவும் வளர்ச்சியடையும். ஆகவே பொறி கருவியாக நுகரப்படுவதைச் சிற்றின்பம்' என்றும், அறிவு கருவியாக நுகரப்படுவதைப் பேரின்பம் என்றும் கூறினும் பொருந்தும். இம்முடிபுகளை யெல்லாம் திருவள்ளுவர் நன்கு அறிந்திருந்தார். இவற்றை யெல்லாம் தமது திருக் குறளில் கல்வி, கல்லாமை, கேள்வி என்ற அதிகாரங் களில் நன்கு விளக்கி யிருக்கிருர். இவற்றைத் தவிர அந்நூலிற் பல இடங்களில் இக்கருத்துக்களின் சாயல் நிழலுகின்றது. சிற்றின்பத்தில திளைத்திருப்பவர்கள் பேரின்பத் தைப்பற்றி கினைப்பது குதிரைக் கொம்பு. அங்ங்ன மிருக்க நமது வள்ளுவப் பெருந்தகை இதற்கு நேர் மாருக விருக்கிருர். இன்பப் பாலில் காம வேட்கையில் மூழ்கியிருக்கும் ஒருவனப் பேரின்பத்தைப் பற்றிப் பேசச் செய்கிருர். இது பாவலரது அறிவு வேட்கை யைக் காட்டுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/93&oldid=781783" இலிருந்து மீள்விக்கப்பட்டது