பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதிப்புரை மதிப்புரை பெறுவதென்பது பண்டைக் காலத்திலிருந்து நூல் எமுதுபவர்கள் கைக்கொள்ளும் வழக்கமாக இருந்து வருகிறது. பல நுட்பங்களே யெல்லாம் விரித்து நூல் எழுதினுலும் ஆக்கியோனே அதைப் புகழ்ந்துகொள்வது அவ்வளவு நன்முக இல்லை. இது குறித்துதான் பிறரிடமிருந்து மதிப்புரை பெறுதல் வழக்கமாக வந்திருக்கவேண்டும். தற்காலத்தில் பெரும்பாலும் எல்லா நூல்களும் மதிப்புரையுடன்தான் வெளிவருகின்றன என்று சொல்லலாம். இப்போது பெரிய மனிதர்களிடம் மதிப்புரை பெறுவது பழக்கத்திலிருந்து வருகிறது. நூலாசிரியனது செல்வாக்கிேைலா நூலில் சொல்லி யுள்ள பொருளின் சிறப்பினுலோ நூல் விற்பனையாகா விடினும், மதிப்புரைதந்த பெரியாருடைய பெயருக் காவது நூல் விற்பனையாகட்டும் என்ற கருத்தினுல் தான் இம்மதிப்புரை பெறும் வழக்கம் இருந்து வருகிறது. பண்டைக் காலத்தில் இவ்வழக்கம் இருந்தது என்பதற்கு இலக்கண நூல்களே சான்ருக இருக்கின் றன. நூல்கள் பெருகியுள்ள காலங்களில்தான் இலக் கணங்கள் தோன்றவேண்டும். மதிப்புரையைப்பற்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/96&oldid=781786" இலிருந்து மீள்விக்கப்பட்டது