பக்கம்:கவிஞரைச் சந்தித்தேன்.pdf/15

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குழந்தையின் அவதாரம், அல்லது புனைவடிவம் இல்லையென்றால், அப்புறம் தாய்க்கு மகிமை ஏது? இல்லை, கடவுளுக்குத்தான் சக்தி ஏது? இவ்வகை நோக்கில், “கடவுள் தந்த பொருள் ” என்று குழந்தையைச் சித்திரிப்பதில் ஒரு பொருளும் இருக்கிறது. அந்தப் பொருளின் பொருளே சிருஷ்டிக்கு ஒரு மறைப்புக் கவர்ச்சியாகவும், வாழ்க்கைக்கு ஒரு திருட்டாந்தமாகவும் அமைகிறது.

“பூவின் மணம் போலத் தங்கும் பொற்புடையோன் ” என்று இறைமைச் சக்திக்கு ஏற்றம் தருகிறது. பாம்பாட்டிச் சித்தர் பாடலொன்று. இங்கே “பூவின் மணமல்லவோ?” என்று குழந்தையை உயர்த்துவதில், பூவின் மணம் போன்ற குழந்தையில் பூவின் மணமான இறைச் சக்தியைக் காணும் நிலையில், கவிஞரின் முன்சொன்ன உவமை நயத்தின் சிறப்பு இயற்கையோடிணைந்த பான்மையுடன் நிறக்கக் காண்கின்றேன்.

இன்னும் உள்ளழுந்தி ரசிக்கும் பொழுது, தெய்வத்திற்கும் ஒருபடி மேலாகவே குழந்தைகள். மதிக்கப்படுகின்றன என்பதையும் உணரலாம்.

“பேசாத தெய்வத்தையும்
ள்பேசவைக்கும் தாயல்லவோ!...”

ஆஹா! குழந்தையையே தாயாக ஆக்கிக் காட்டும் கவிஞரின் உள்ளத் தொனியிலே,

16