பக்கம்:கவிஞர் கதை.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

கவிஞர் கதை



கொள்ளவில்லை. நீங்கள் எத்தனை நாள் கீழே சுற்றி அடைத்திருந்தாலும் எங்களுக்கு ஒரு குறையும் இல்லை. கீழேயிருந்து நெல் வர வேண்டும் என்பது இல்லை. இங்கே வளரும் நெடிய மூங்கில்களில் நெல் விளைகிறது. அந்த அரிசியைக் கொண்டு நாங்கள் சமைத்துச் சாப்பிடுவோம். இங்கே எத்தனையோ பலாமரங்கள் இருக்கின்றன. அவற்றில் கனிந்து தொங்கும் பழங்கள் வேறு இருக்கின்றன. வள்ளிக் கிழங்குகள் நிறைய உண்டு. அவற்றைச் சுட்டுச் சாப்பிடுவோம். பறம்பு மலைக் காட்டிலே தேனுக்குப் பஞ்சமே இல்லை. சுனைகளில் தெளிந்த நீரும் இருக்கிறது. இவ்வளவையும் வைத்துக் கொண்டு எவ்வளவு ஆண்டுகளானாலும் சுகமாக இருக்க முடியும். உங்கள் படைப் பலத்தைக் கொண்டு பாரியை வெல்ல முடியாது. ஆனாலும் ஒரு தந்திரம் செய்தால் இவன் நாட்டைப் பெறலாம். பாட்டுப் பாடக் கற்றுக்கொண்டு நீங்கள் வாருங்கள். உங்கள் மனைவிமாருக்கு ஆடல் பாடலைக் கற்றுக்கொடுத்து அவர்களையும் அழைத்து வந்து பாடுங்கள். அப்போது பாரி, பறம்பு நாட்டைக் கேட்டாலும் கொடுப்பான், பறம்பு மலையையும் கொடுப்பான்!” என்று அந்தப் பாட்டிலே இருந்தது.

அதைப் பார்த்த அரசர்கள் மிகவும் நாணம் அடைந்தனர். ஒன்றும் செய்ய முடியாமல் ஊருக்குத் திரும்பிப் போய்விட்டார்கள்; ஆயினும் அவர்களுடைய கோபம் தீரவில்லை.

வஞ்சகமாக, பாட்டுப் பாடத் தெரிந்த சிலரை அனுப்பிப் பாரியைக் கொலை செய்யும்படி அம்மன்னர்கள் ஏவிவிட்டார்கள். அவர்கள் பாரியினிடம் வந்து, தனியே அழைத்துச் சென்று கொன்று விட்டு ஓடிவிட்டார்கள்.



பாரியின் பிரிவால் கபிலர், எல்லை இல்லாத துயரத்துக்கு ஆளானார். தம்முடைய உயிரையும் மாய்த்துக்கொள்ளத் துணிந்தார். ஆனல் பாரியின் பெண்கள் இரண்டு பேரையும் எண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞர்_கதை.pdf/14&oldid=1525692" இலிருந்து மீள்விக்கப்பட்டது