பக்கம்:கவிஞர் கதை.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

கவிஞர் கதை



சிங்கத்துக்குப் பிறந்த குட்டிகள் அல்லவா?” என்று அங்கு வந்திருந்த புலவர் ஒருவர் கேட்டார். கிள்ளிவளவன் அதைக் காதில் வாங்கிக்கொள்ளவில்லை.

அன்று முதல் அவன் உள்ளத்தில் பொல்லாத எண்ணம் ஒன்று முளையிட்டது. ‘எப்படியாவது அந்தப் பிள்ளைகளையும் தகப்பனார் போன இடத்துக்கே அனுப்பிவிட வேண்டும்’ என்ற எண்ணந்தான் அது. அவர்கள் இருவரும் குழந்தைப் பருவம் தாண்டாதவர்கள் என்பதை அறிந்தும் அவன் மனத்தில் பதிந்திருந்த பகையுணர்ச்சி போகவில்லை. குழந்தைகளாக இருந்தால் என்ன? முள்மரத்தை இளஞ்செடியாக இருக்கும்போதே


"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞர்_கதை.pdf/28&oldid=1525745" இலிருந்து மீள்விக்கப்பட்டது