பக்கம்:கவிஞர் கதை.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 - கவிஞர் கதை

அங்கே செங்குட்டுவனுடைய மனைவியும் அவன் தம்பியாகிய இளங்கோவடிகளும் இருந்தார்கள். - -

சித்தலச் சாத்தனர். 'கண்ணகியை, மதுரை நகருக்குக் காவல் தெய்வமாகிய மதுராபதி, இரவிலே கண்டு பேசியதை நான் கேட்டேன். மதுரைக் கோயிலில் நான் படுத்துக்கொண் டிருந்த பொழுது இது விகழ்ந்தது' என்று சொல்லி, கண்ணகியின் கணவன் கோவலன் கொலேயுண்டதையும் பத்தினியாகிய கண்ணகி மதுரையை எரித்ததையும் எடுத்துச் சொன்னர். கண்ணகியின் வரலாற்றைக் கேட்டு, யாவரும் வியப்பில் ஆழ்ந்தார்கள்.

அவள் கதையைக் காவியமாகச் செய்தால் நன்முக இருக்கும் என்று சாத்தனர் எண்ணினர். இளங்கோவடிகளும் புலமை யுடையவராதலின் மரியாதைக்காக அவரையே அக்தக் காவியத் தைப் பாடும்படி சொல்லலாம். அவர் எங்கே ஏற்றுக்கொள்ளப் போகிருர்? கம்மையே பாடும்படி சொல்வார்’ என்று எண்ணி, "இந்தப் பத்தினித் தெய்வத்தின் கதையை அடிகளாகிய நீங்களே பாடியருள வேண்டும்" என்ருர், துறவி இந்தக் கதையில் ஈடுபட மாட்டார் என்றும் நினைத்தார். ஆனல் இளங்கோவடிகள் மனத் தைக் கண்ணகியின் கதை உருக்கிவிட்டது. சாத்தனர் சொன்ன வுடன், "அப்படியே செய்கிறேன்' என்று ஒப்புக்கொண்டு விட்டார். " * - . . -

கண்ணகியின் கதையைக் காவியமாகப் பாடவேண்டும் என்ற ஆர்வத்தோடு இருந்தவர் சாத்தனர். இப்போது அதற்கு இடம். இல்லாமற் போயிற்று. ஆலுைம் ஏதாவது ஒரு காவியத்தை இயற்ருமல் இருப்பதில்லை என்ற வேகம் அவருக்கு உண்டாயிற்று. கண்ணகியின் கதையைப் பாட முடியாவிட்டாலும் கோவலனுக் கும் மாதவிக்கும் பிறந்த மணிமேகலையின் கதையையாவது பாடலாம் என்ற ஊக்கம் பிறந்தது. விரைவில்ே அதைப் பாடி முடித்துவிட்டார். இந்த இரண்டு காவியங்களும் சேர்ந்தே தமிழ் காட்டில் உலவலாயின. பிற்காலத்தில் ஐம்பெருங் காப்பி யங்கள் என்று ஒரு வரிசையைப் புலவர்கள் பாராட்டிச் சொல் வார்கள். அந்த ஐந்தில் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் முதலில் நிற்கின்றன.

சாத்தனருக்குச் சித்தலச் சாத்தனர் என்று பெயர் வந்த தற்கு ஒரு காரணம் உண்டு. எல்ல கவிதையைக் கண்டால் அவர் மிகவும் விருப்பத்தோடு படிப்பார் கவருண கவிதைகளையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞர்_கதை.pdf/58&oldid=686159" இலிருந்து மீள்விக்கப்பட்டது