பக்கம்:கவிஞர் பேசுகிறார், பாரதிதாசன்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ்த் தொண்டு

5


என்றால் என்ன புவவர்களால் இயந்தப்படுவது தானே. நாம் எவ்வனோ இயற்றுக் கொள்ளலாமே. பாரதியார் முயன்றால் முடியாதா? அல்லது பண்டிதர்கள் பழைப்புக்கும் செல் வாக்குக்கும் இதுதான் வேண்டுமா? சொல்லட்டும் ஒப்புக்கொள்வோம். ஆனால், ஏன் மக்களிடம் முன்னுக்குப்பின் முரணாகப் பேசி தங்களுடைய வாழ் நாளை வீணாளாக்கிக் கொள்வதால் தன் நாட்டையும், தமிழ் மக்களது முன்னேற்றத்தையும், தமிழ் மொழி அபிவிருத்தியையும், தங்களது மிகக்குறுகிய நோக்கங்களால் கெடுக்கின்றன. இதைக்கண் பிறநாட்டார். நம்மைப் பரிகசிக்க மாட்டார்களா?

நமது விட்டில் டாக்டர் பட்டம், மற்றும் பட்டங்கள் எல்லாம் எப்படி? மேல் நாட்டில் டாக்டர் பட்டம் எப்படி? இவற்றை ஆராய வேண்டாமா? நாம் முன்னேற, நமது மொழி முன்னேற வழி தேட வேண்டாமா?

தமிழ் மொழி எல்லா பாமர மக்களும் மிக எளிதில் புரித்து கொள்ளும் வகையிலே, எல்லா மதத்தினர்களும், உலகமக்களனைவரும் தமிழ் மொழியை விருப்புடன் படிக்கும் வகையிலே இயற்ற வேண்டும்.


கவிஞர் பேசுகிறார்