பக்கம்:கவிஞர் பேசுகிறார், பாரதிதாசன்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

நூலறிவும் - உணர்வும்


றார்கள் தார்க்கீக ஞானிகள்! அந்தோ இவ்விஷயத்தில் இவர்கள் உணர்வு கொள்ளாதிருத்தலே யன்றி ஏழு ஆண்டுகளாகக் குடியரசு செய்து போந்த கிளர்ச்சியின் பயனாக உணர்ச்சி ஏறிவரும் பெருமக்களை, சுயமரியாதைகாரரை - அறிவியக்கத்தினரைப் பார்த்து ”இவர்கள் நூலறிவற்றவர்” என்றும், ”ஆராய்ச்சியற்றவர்” என்றும் சொல்லி உணர்ச்சிக்குத் தடை போடவும் முயல்கின்றனர். இவ்வறிஞர் செயல் தார்க்கீகப் பெரியார் செயல் இரங்கற் குரியதாகும்.


ஓ புராண அறிஞர்களே! இதிகாச அறிஞர்களே! கடவுளறிஞர்களே! மத அறிஞர்களே! சாதி அறிஞர்களே! மூடப் பழக்க வழக்க அறிஞர்களே! நூலறிஞர்களே! தார்க்கீக அறிஞர்களே! கண்ணைத் திறந்து பாருங்கள் உணர்வு என்னும் பெரும்பதம் நோக்கி மக்கள் அபரிமிதமாக ஓடுகின்றனர். நீங்கள் இருந்த இடத்தினின்று அசையாமலிருக்கின்றீர்களே! உங்கள் நிலை என்னாகும்?

நான் கல்வி, நூலறிவு வேண்டியதில்லை என்கின்றேனா? இல்லை யில்லை. உண்மை, மெய்மைகளை ஆதாரமாக உடைய பகுத்தறிவு, நூண்ணறிவு, உணர்வு, நுண்ணுணர்வுகளை யுடையார் ஆக்கிய நூற்களைக் கொள்ளுமாறு கூறுகிறேன். தார்க்கீகத்தை வளர்க்கும் நூற்களைத் தள்ளுமாறு கூறுகிறேன்

நல்வாழ்வுக்கு, சுதந்திர வாழ்வுக்கு - சமத்துவமான வாழ்வுக்கு. சகோதரத்துவ வாழ்வுக்குரிய வகையில் உணர்வுகொள்ள வேண்டுமென்பதே எனது கோரிக்கை.


கவிஞர் பேசுகிறார்