பக்கம்:கவிஞர் பேசுகிறார், பாரதிதாசன்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழும் இசையும்

கவிதையில் தெய்வத் தன்மையிருக்கிறதென்கிறார்கள். அது வேண்டாம்; மனிதத் தன்மையிருந்தால் போதும். தெய்வத்தன்மையென்று சொல்லிக் குட்டிச் சுவராகப் போய்விட்டோம். சிவபெருமான் அகஸ்தியருக்குத் தமிழைச் சொன்னார். எது போல்? பாணினிக்கு வடமொழியைச் சொன்னதுபோல். எடுக்கும்போதே கலகம் மூட்டி விட்டார்கள். தமிழன் ஆதியைப்பற்றி புராணங்கள் சொல்கின்றன். தமிழ் உண்மையிலேயே உயர் நிலையிலிருந்தது. "கண்ணுதற் பொங்கடவுளும் கழகமோ டமர்ந்து பண்ணுறத்தெளிந் தாய்ந்த பசுந்தமிழ்" என்றதனால் சிவபெருமான் கூடச் சங்கத்தில் ஒரு மெம்பராக இருந்து தமிழை ஆய்ந்ததாகத் தெரிகிறது. இதிலிருந்து சிவபெருமானுக்கு முன்னாலேயே தமிழும் தமிழரும் இருந்தார்கள் என்று சொல்லவேண்டும். தமிழர்கள் பல நூற்றாண்டுகளாகத் தூங்கிக்கொண்டிருந்து விட்டார்கள். உயர்ந்த இடம் கோவில் என்று மதிக்கப்படுகிறது. ஆனால் அங்கு தமிழுக்கு என்ன இடம்

கிடைக்கிறது? மானங்கெட்டுப்போய்தான இருக்கிறோம். தமிழுக்கு ஏற்ற இடம். அந்தஸ்துகொடுக்


கவிஞர் பேசுகிறார்