பக்கம்:கவிஞர் பேசுகிறார், பாரதிதாசன்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

தமிழும் இசையும்


கப்படவில்லை. பழங்கதைகள் பேசுவதால் பயனில்லை. தமிழ் நாட்டில் எங்கு பார்த்தாலும் அச்சம் காரணமில்லாத அச்சம் காணப்படுகிறது. அதற்கு மடமைதான் காரணம். பாரதியார் எடுத்த எடுப்பிலேயே "அச்சந்தவிர்" என்றார்.

தமிழ் இசையைப்பற்றிச் சொன்னார்கள். தமிழ் இசையைக் கெடுத்தவை ஹார்மோனியமும், தியாகராஜய்யர் கீர்த்தனமும் என்று பாரதியார் சொன்னார். தியாகராஜர் ஒரு இசைப்புலவர்; மொழிப் புலவரல்ல. நல்ல கவிதைக்கு மொழிப்புலமையும் வேண்டும்; வெறும் இசைப்புலமை மட்டும் போதாது. தியாகராஜர் ஏன் மொழிப்புலவரல்ல என்று சொன்னார்? அவரது பாடல்களிலே பல பிழைகள் இருக்கின்றனவென்று தெலுங்கர்களே சொல்லுகிறார்கள். அவர் பாடியிருப்பது ஒரு நாடோடி பாஷை, தெலுங்கு அல்லாத, தமிழ் அல்லாத ஒரு பாஷை. 'நானும் தமிழன் தான். ஆனால் தெலுங்குப் பாட்டு வேண்டாமென்று சொல்லக்கூடாது. ஒரு சில பாட்டுகளைத் தமிழில் பாடினால் போதும்”

என்று சொல்கிறவர்கள் பத்து வருஷத்துக்கு முன் தமிழ்ப் பாட்டு சிலவற்றையாவது இடையிடையே பாடிவைக்கக்கூடாதா? சில்லரையென்று சொல்லி ஏன் இழிவு படுத்தினார்கள்? எதற்கும் அடிமைத்தனம் மாறவேண்டும், பக்தியென்ற முட்டாள் தனத்தினால் தான் அடிமைத்தனம் உண்டாகின்


கவிஞர் பேசுகிறார்