பக்கம்:கவிஞர் பேசுகிறார், பாரதிதாசன்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

தமிழும் பாரதியும்


பாடினால்தான் நல்லவன்! இல்லாவிட்டால் கவிஞன் அல்ல. இப்படி யிருந்தால் பாஷை எப்படி விருத்தியாகும்? வெற்றி கிடைத்தால் கடவுளினால், தோற்றுப் போனால் அது விதி.

30 வருடத்துக்கு முன் ஒருவர் ஒருநாவல் எழுதினார். இது வழி நூலா சார்பு நூலா என்றெல்லாம் கேட்கத்தலைப்பட்டு விட்டார்கள். சுதந்தரமாக நினைத்ததை எழுத தைரிய மில்லாதிருந்தது அக்காலத்தில். இந்த நிலையில் அயர்லாண்டு தன் பாஷையை அபிவிருத்தி செய்து சுதந்திரம் பெற்றது, ஆங்கிலேயர் ஆண்டுதோறும் இலக்கணத்தை மாற்றி யமைக்கின்றனர்; இதனால் இலக்கியம் வளருகிறது என்ற செய்தியைக் கேட்கிறோம். இங்கிலீஷ் புத்தகசாலையில் ஒரு புத்தகத்தை எடுத்துப் பார்த்தால் சொப்பு செய்யும் வகை காணப்படுகிறது; தமிழ் புத்தகசாலையில் ஒன்றை எடுத்தால் 'அங்கிங் கெனாதபடி' என்றுதான் ஆரம்பிக்கும். முந்தி இருந்தது பழைய பதிப்பு. இப்பொழுதிருப்பது புதிய பாக்கெட் சைஸ் பதிப்பு. இவ்வளவு தான் வித்தியாசம்! உலகத்தில் வேறு கருத்துக்கள் இல்லையா? கவி காண்கிற பொருள்களிலெல்லாம் கவனம் செலுத்துவான்; தான் இன்பத்தை நுகர்வான், பாடுவான், பிறர் படிப்பர், அவர்களுக்குப் புரியும், இன்பத்தை அனுபவிப்பர்,

இப்படிச் செய்ய வல்லவன் கவி.


கவிஞர் பேசுகிறார்