பக்கம்:கவிஞர் பேசுகிறார், பாரதிதாசன்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

தமிழும் பாரதியும்


என்றால் எப்படியிருக்க வேண்டும்? "நான் வாழும் தேசம்" என்னுடையது. நான் ஒருவனே இருந்தாலும் அந்தத் தேசம் என்னுடையது தான். என் வகுப்பார் உயர்ந்தவர்கள். இப்படிப்பட்ட கருத்துக்களை நிரப்பியிருப்பது "தேசீயக் கவி." ஆனால் நமது அன்பர்கள் பலர் தினமும் தேசிய கீதம் எழுதுகிறார்கள்!

பாரதியார் தேசீயகீதம் ஒன்றை எழுதி என்னிடம் காண்பித்து, பிரஞ்சுக் கவி எவ்வளவு வீரமாக எழுதியுள்ளான்; எனக்கு அவ்வளவு வருமா என்று சொன்னார். தாம் எழுதியதுகூட அவ்வளவு உயர்ந்ததல்ல என்று நினைத்தார்.

தொன்று நிகழ்ந்த தனைத்து முணர்ந்திடு
சூழ்கலை வாணர்களும் - இவள்

என்று பிறந்தவ ளென்றுண ராத
இயல் பின ளாமெங்கள் தாய்

முப்பது கோடி முகமுடை யாளுயிர்

மொய்ம்புற வொன்றுடையாள்

முப்பது கோடி மக்களையுடையது எங்கள் நாடு. ஆனால் உயிர் ஒன்றுதான். இன்னும் "உங்கள் நாட்டில் பதினெட்டு பாஷைகள் இருக்கின்றனவே, நீங்கள் எப்படி முன்னேறப் போகிறீர்கள்?" என்று யாராவது கேட்டால் என்ன சொல்வது? பாடுகிறார்.

... .... ... ... ... இவள்
செப்பு மொழிபதி னெட்டுடையாள், எனிற்

சிந்தனை யொன்னுடையாள்

கவிஞர் பேசுகிறார்