பக்கம்:கவிஞர் பேசுகிறார், பாரதிதாசன்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலை என்றால் என்ன?

29


தமிழே சிவம் என்று இப்படியெல்லாம் நினைத்துக் கொண்டும் சொல்லிக் கொண்டும் நம் நாட்டுத் தமிழ்ப் புலவர்கள் பலர் இருக்கின்றார்கள்.

தமிழ் நூல்களை எடுத்துப் படிக்கலாமென்றால் ”தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டுக்கும் இறைவா போற்றி" என்ற இந்தச் சங்கதியில்லாமல் வேறொன்றையும் காணோமே. ஒரு கிறிஸ்தவரோ, ஒரு முஸ்லிமோ அல்லது வேறு எந்த மதத்தவரோ தமிழ்நூல் நிலையத்தில் நுழைந்து ஒரு தமிழ் நூலை எடுத்துப் படிக்கலாம் என்று விரித்தால் முதல் முதல் உள்பக்கத்தில் மேலே ஒரு குறி, அதற்குக் கீழே பிள்ளையார் பாட்டு. அதற்குக் கீழே சிவன் பாட்டு, இப்படி ஒரு 5 அல்லது 6 பாட்டுக்கள். பிறகு எழுதினவர் பெயர், இப்படியிருப்பதைப் பார்த்தால் ஓ; இது என்னவோ பிள்ளையாரைப் பற்றியும் சிவனைப்பற்றியும் எழுதியிருக்கிறது போலும் என்று மூடிவைத்துவிடுவான்.

மேனாட்டில் ஒரு வெள்ளையன் உட்கார்ந்து கொண்டிருக்கையில் ஒரு பழம் விழுந்தது. அதைப் பார்த்தான். அது ஏன் கீழே விழுந்தது என்று ஆராய்ந்தான்; புத்தகங்கள் எழுதினான். அவை மக்கள் வாழ்க்கைக்குப் பயன்படுகிறது. சப்தம் எப்படி உண்டாகிறது? ஒன்றை ஒன்று மோதினால் சப்தம் உண்டாகிறது. இந்த ஆராய்ச்சியில் விளக்கின் ஓளி சுவரில் மோதும் போதும் சப்தம் உண்டா


கவிஞர் பேசுகிறார்