பக்கம்:கவிஞர் பேசுகிறார், பாரதிதாசன்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

கலை என்றால் என்ன?


கிறது. ஆனால் உனக்குக் கேட்பதில்லை. பலவற்றை இவ்வாறாகக் கண்டு பிடித்தான். புத்தகங்கள் எழுதினான். மக்கள் படித்து வாழ்க்கைக்குப் பயன் படுத்திக்கொண்டார்கள். ஆனால் நம் தமிழ்ப் புத்தகங்கள் தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டிற்கும் இறைவா போற்றி என்பதைவிட வாழ்க்கைக்கும், அறிவிற்கும் பயன்படக் கூடியதாக ஒன்றும் காணோமே. தமிழ்ப் புலவர்களெல்லாம் எழுதட்டுமே.

ஒரு வாலிபன் அவனுக்கு ஒரு இளம் பெண் - பெண்டாட்டி. அவர்களுக்கு ஒரே குழந்தை. ஒரு பண்டாரம் வந்து குழந்தையை அறுத்துச் சமைத்துப் போடு என்று கேட்டானாம். இருவரும் குழந்தையை வெட்டிக் கறி சமைத்துப் போட்டார்களாம். இப்போது யாராவது வந்து கேட்டால் அப்படிப் போடுவார்களா? அல்லது கேட்டவன் தான் தப்பித்துக் கொண்டு போய் விடுவானா? மற்றொருவனிடம் பண்டாரம் போய் அவனுடைய பெண்டாட்டி வேண்டுமென்று கேட்டானாம். உடனே பெண்டாட்டியைக் கொடுத்தானாம். ஒருவனுக்கு இரண்டு பெண்டாட்டிகள். ஒரு பண்டாரம் வந்து, 'எனக்குப் பொம்பளை வேண்டும்" என்று கேட்டான். அவன் ஊரெல்லாம் தேடியும் பொம்பளை கிடைக்கவில்லை. கடைசியில் வருத்தத்துடன் தன் இரண்டு பக்கத்தில் நிற்கும் பெண்டாட்டிகளைப் பார்த்தான். அவர்கள் "நீங்கள் ஏன் வருத்தமாயிருக்கிறீர்கள்"


கவிஞர் பேசுகிறார்