பக்கம்:கவிஞர் பேசுகிறார், பாரதிதாசன்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இசை என்பது என்ன?


இசை என்பது என்ன? அந்த நாட்டில், பழைய நாள் தொட்டு மக்களின் உணர்வில் ஊறி நாளடைவில் உருப்பட்ட இலக்கணம் உடையது. பாட்டுக்கு பாவம் எப்படியோ, அப்படியே இசையும் முக்கியம்.

இனிய மொழி என்பது அந்நாட்டின் பேச்சு, பாட்டுக்கு வேண்டிய மொழிகள், எல்லாருக்கும் புரியும்படி இருக்கவேண்டும்! இலக்கண முடையவையாகவும் இருக்கவேண்டும்.

இப்படிப்பட்ட பாவமும், இசையும், கருத்தும் பிறக்கின்ற கவிஞனின் உள்ளமானது மொழியிலக்கணம், யாப்பிலக்கணம், பயின்ற தாயிருக்கவேண்டும். இல்லா விட்டால் பாடும் பாடல்கள் பாடியவனுடைய பெருமையைக் கெடுத்து விடுவதோடு, எதைக்குறித்துப் பாடினானோ அந்தச் செய்தியே இகழ்ச்சிக் குரியதாகி விடும்.

பாடல்களின் நோக்கம் என்ன எனில், பாவமும் இசையும் மொழியும் இருப்பது மாத்திரமல்ல; பாடும் போது கருத்து விளக்க முறவேண்டும். பாடலில் மொழி அதாவது கருத்துத்தான் இரத்தினம்.


கவிஞர் பேசுகிறார்