பக்கம்:கவிஞர் பேசுகிறார், பாரதிதாசன்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

இசை என்பது என்ன?


பாவமும் இசையும் வர்ணத்தகடும், வேளைப்பாடுந்தான்.

இப்போது உரை நடைக்கும் பாடலுக்கும் உள்ள வேறுபாடு விளங்கி யிருக்கும். பாடலின் மேன்மையை இன்னம் கூற வேண்டுமானால், உரைநடையானது கேட்கமுடியும்; எழுதிவைக்க முடியும்; நினைவில் நிறுத்த ஏற்ற தல்ல. பாட்டு நினைவில் நிற்கும். பாடுவது பாட்டின் கருத்தை மக்கள் நினைவில் நிற்கச் செய்யத்தானே!

பாடலினால் ஒரு கருத்தை மற்றொருவன் நெஞ்சில், உரித்த சுளை போல் புகுத்த முடியும். அது போலவே இன்பம் பயக்கும். ஆயிரம் பேர் பேசட்டும்; அது சந்தைக் கடைக் கூச்சலாகவோ அல்லது அறிஞரின் சொற் பொழிவாகவோ இருக்கட்டும். எதுவாயிருந்தாலும் அந்தப் பேச்சு நடுவில் ஒரு பாடல் கிளம்பினால், எல்லோருடைய செவிகளும் அப்பாட்டை நோக்கியே திரும்பும். சூரியனை நோக்கிச் சூரிய காந்திப் பூத் திரும்புவது போல. அதென்னமோ பாடலில் மக்கள் நெஞ்சை அள்ளும் ஒரு வகை வன்மை அமைத்திருக்கிறது.

பாடலின் மேன்மை அதன் உபயோகம் இவற்றைக் கருதியல்லவா மதத் தலைவர்களும், தம் தம் கொள்கையைப் பாடலால் அமைத்தார்கள். சைவக்

கொள்கையை நிறுவத் தேவார, திருவாசகங்கள் என்ன? வைணவத்திற்குத்திருவாய் மொழி என்ன?


கவிஞர் பேசுகிறார்