பக்கம்:கவிஞர் பேசுகிறார், பாரதிதாசன்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதியார் பாடல்கள் தமிழ் மக்களின் உள்ளத்தில் சுதந்திர உணர்ச்சியை உண்டுபண்ணினது போல, பாரதிதாசனுடைய பாடல்கள், சமூக சீர்திருத்த உணர்ச்சியை மக்களுக்கு ஊட்டி வருகின்றன என்றால், அது மிகையாகாது!

கவிஞர் தேசிகவிநாயகம் பிள்ளை


கவியரசர் பாரதிதாசன் ஆவேசக் கவி. அவர் (அழகு) அலங்காரக் கவியல்ல. வெறும் ஜோடிப்பு வேலை செய்பவரல்ல. அகராதியைக்கொண்டு கவிகட்டும் மேஸ்திரியல்ல. புன்மைக் கவிதையைக் கொண்டு மனம் பொங்கும் புலவர் அல்ல. ஆவேசத்தையும், உணர்ச்சியையும் வெள்ளமாகக் கொட்டும் "உயிர்க் கவி" பாரதிதான்.

பெரியார் வ.ரா.


தமிழ்மக்கள் தாழ்வடைந்துள்ள காரியங்களைப்பற்றிப் பேசும்போது அவருடைய வார்த்தை ஒவ்வொன்றும் நெருப்பைக் கக்கிக்கொண்டு வெளிவந்தது. தமிழரின் மேன்மையைப்பற்றி பேசும்போதோ, பெருமிதத்துடன் உள்ளதைக் காட்டிலும், ஒரு சாண் அதிகமாக உயர்ந்து நின்று சிம்மத்தைப்போல கர்ஜித்தார்.

ஆசிரியர் "கல்கி"


கவிஞர் பேசுகிறார்