பக்கம்:கவிஞர் பேசுகிறார், பாரதிதாசன்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞன் உள்ளம்

கவிஞன் உள்ளும் புறமும் துருவி முத்துக் குளிப்பது போன்று உண்மையை, அழகைக் கண்டெத்துக் காட்டுபவன் கவிஞனுக்கும் புலவனுக்கும் மேதையில் வித்தியாசமில்லை யெனினும் கவிஞன் இயற்கையிலேயே கவிதை கட்டும் சக்தி பெற்றவனாயிருக்கின்றான். இயற்கை அழகிலும் மக்கள் உள்ளத்திலும் கவிஞன் இரண்டறக்கலந்து, துருவி சித்திரம் தீட்டிக்காட்டுகின்றான். மற்றவர்கள் இயற்கை சக்தியிலக்கப்பட்டு மேலெழுந்த வாரியாகச் சுவைக்கிறார்கள். எவ்விடத்தும் கவிஞன் சுதந்திரம் உடையவன் பெரும் பான்மையோருக்குக் கவியாகும் வித்து உண்டு கவியன் கவிஞனாகப் பிறக்கிறான். ஆனால் அந்த வித்தை எருப்போட்டு, நீர் விட்டு வளர்க்கும் வழிகள் உண்டு. கவிஞன் ஆவதற்கு இலக்கணம் இலக்கியம் ஒன்றும் படிக்க வேண்டாமென்று சிலர் சொல்கிறார்கள். அப்படியல்ல; அவற்றைக் கட்டாயம் படித்துத் தானாக

வேண்டும். கவிஞன் ஒரு நாட்டுக்கு என்ன செய்ய முடியுமென்பதைப் பாரதியார் நீரூபித்துக்காட்டி விட்டார். அவரது பாட்டுக்கள் வெளிவந்தது முதல் நாட்டில் தமிழ் வேட்கை அதிகரித்தது. கவிஞன்


கவிஞர் பேசுகிறார்