பக்கம்:கவிஞர் பேசுகிறார், பாரதிதாசன்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

கவிஞன் உள்ளம்


சரியாக உணர்ந்து சரியாகச் சொல்வான். சாசுவதமான உண்மையைத்தான் சொல்வான். இந்த உண்மைகள் கவிஞனுக்கு முன்னாலே புலப்படுகின்றன. மற்றவர்களுக்குப் பின்னாலே புலப்படுகின்றன. சிலர் தம்மையே புலவரென்று நினைத்துக்கொண்டு திண்டாடுகின்றனர். புதிதாக ஒன்றும் சொல்லத் தெரியாது. முன்னுள்ள கலம் பகம் அந்தாதியைப் பார்த்து வரிசையாக அதையே பாடுகிறது. புதிதாக ஒரு இலக்கியம் செய்யச் செயலில்லை. கல்லாடம் போன்ற நூல்களில் பாக்கியிருப்பதற்கு உறையெழுத முடியாது. எதையாவது மொழி பெயர்க்கிறது. செத்தநூல்களை மொழிபெயர்ப்பது ஒரு புலவனின் வேலையா? சொந்தத்தில் ஒன்றும் வராது. யாராவது புதிதாகப் பாட முற்பட்டால் படிக்கவில்லை, இலக்கணம் தெரியாது என்று குறை சொல்லிக்கொண்டிருப்பது,

கையாலாகாத இவருக்குப் பெரிய புராணமும் கம்பராமாயணமும் இல்லாவிட்டால் பேச்சுக்கே இடமில்லை இதை விட்டால் வேறு வழியேது? பட்டங்களைப் பற்றி நீங்கள் மயங்க வேண்டுயதில்லை. சிபார்சு செய்தால் வந்து விடக்கூடியதுதான்."


கவிஞர் பேசுகிறார்