பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 : பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு இனி நீ எனக்கு இரை யல்ல; இறை! என் மனந்தளவில்-நீ மாமன்முறை! என் உள்ளத்தைக் காத்தது-உன் உடல் வாகு; எனக்கு மாலையிட்டு-நீயென் மணாளன் ஆகு! திருமணம் ஆனபின் தினம் தினம்... விடியும் வரை-தாள் விலகா திருக்கும் அறை அங்கு விளையும் இன்பத்திற்கு-ஏது வரையறை! என்- . மனத்தைப் புரிந்துகொள்: திரு மணத்தைப் புரிந்துகொள்! (I-பக்.293-95) இஃது அரக்கப் பெண்ணின் விரகதாபம். (2) ஊர்வசி : தேவதாசி; துடை அழகி (ஊரு-துடை, அத்தனின் வேண்டுகோட்கிணங்க உம்பருலகு சென்ற பார்த்தன்மீது தன்னைப் பறி கொடுக்கின்றாள். வானுலகில் இந்திரன் ஒதுகீடு செய்து அதில் வாழும் அர்ச்சுன னிடத்திற்கே சென்று விடுகின்றாள். - அவளை வாஞ்சையோடு வரவேற்று-காஞ்சன ஊஞ்சலில் இருத்தி உபசார மொழிகளை வார்த்தாள்!