பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வருணனை வளம் * 97 எல்லாம் இவர்கள்தான்-வேறு யார் சொல்வார்கள் கூடாதாம் பச்சையம். "எழுதுவன எல்லாம் எழுத்தாளர்களின் சொந்த அநுபவம் ஆகுமா? என்று வினவும் பாங்கில், "எழுத்திலே பச்சை என்றால் எழுத்தாளர் மனசிலே பச்சை என்றாகுமா? நாடகத்தில் பாத்திரங்கள் பேசுவ தெல்லாம் ஆசிரியர் பேச்சா? நரகம்’ எனது நரகமா? நரகத் தலைவனின் நரகமா? என்றெல்லாம் வினாக்களை எழுப்பி விட்டுக் கவிஞரே பேசுகிறார் பல செய்திகளை: பற்பசையில் முத்துச்சரம் எண்ணெயில் தாழ்கூந்தல் செருப்பில் மலரடி உடையில் சிலையுரு பவுடரில் பட்டழகு சோப்பினில் நட்சத்திரம் விற்றிடுவாள் விளம்பரத்தால் முலைக் கோண வலைக்குமரி இப்படிப் பல அடிகள்-விளம்பரத்தில் பெண்ணைப் பலவகையிலும் பயன்படுத்தப் பெறுவதைப்-பார்ப்போரி டம் காம விகாரத்தை ஏற்படுத்தும் வகையில் இச்சைக்கு வழிபாடு எங்கும் எப்போதும் நடைபெறுவது சுட்டிக் காட்டப் பெறுகின்றது. நடைமுறையில் நடைபெறும் அசிங்கங்களை அடுக்கடுக்காக எடுத்துககாட்டி எழுத்தில் வருவன குற்றமல்ல என்பதை வலியுறுத்துகின்றார். இதனைப் படிப்பவர்கள் வாலியாரின் வருணனையில் வருவன குற்றமல்ல, இயல்பாக இலக்கியங்களில் வருவனவே என்பதை உணர்வார்களாக மேற்காட்டப்பெற்ற வருணனைகள் யாவும் புதுக் கவிதை அமைக்கும் இலக்கிய தளமாக அமைந்து காவியத்தைக் கவின்பெறச் செய்கின்றன என்பதை அறிந்து மகிழ்கின்றோம்; பெருமிதமும் கொள்ளுகின்றோம்.