பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவிய மாந்தர்கள்அறிமுகம் * 99 ஓடிவந்த கங்கையானது-ஆடை சூடிவந்த மங்கையானது! வானதிப் பெண்-ஒரு மானிடப் பெண்-என வடிவம் தாங்கினாள்; இந்திர வில்லின் சாலத்தைவிசும்பின் நீலத்தை-இரு விழிகளில் வாங்கினாள்! பாதாதி கேசம்பளிச்சிட்டது-அவளது பிரகாசம், அதனைப் பார்த்துப் பார்த்துப் பிரமித்தது அந்தப் பிரதேசம்! (I-பக்.9-10) கங்கைதான் பாண்டவர் பூமி என்ற காவியம் பிறக்க அமைந்த விளைநிலம்; அதற்கு நீர் பாய்ச்சியதும் அந்த ஆறுதான் பெண்வடிவில்! 2. சந்தனு: இவன்தான் பாண்டவர் பூமி பிறக்கக் காரணமான விதை. கங்கை நிலத்தில் ஊன்றிய விதை. புருஷோத்தமனாகிய-இந்தப் புருவன.... - பேரனுக்குப் பேரனுக்குப் பேரனாகத்தான்பேரரசன் சந்தனு- - பிறந்து வந்தான்! (I-பக்.29)