பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xii அடுத்துவரும் இயல் பாண்டவர் பூமிவழி வெளிப்படும் கவிஞர் வாலியின் சொல்லாட்சிச் சிறப்பைச் சான்று காட்டி விளக்குகிறது. மூவரது காத்து வந்த முத்தமிழை அந்தப் பூவரசு சுற்றி வந்து பெற்றவன் நான் எனக் கவிஞர் வாலி தன்னைப் பற்றிக் கூறும்போதும், பிள்ளையார் சுழியைப் பிள்ளையாரே போட்டு எழுதிய ஒரே கதை இந்தக்கதைதான் என மகாபாரதத்தைக் கூறும்போதும், இன்னும் இறவாதிருக்கும் ஒரு கதை, கிராமத்து மண்ணும் மறவாதிருக்கும் ஒரு கதை, இதன் மகத்துவத்தைப் பேச-என் கவித்து வத்திற்கு ஏது அருகதை? உப்புக் கடலின் உள்ளி டெல்லாம்-ஒரு செப்புக் குடமா செப்பக் கூடும்?-நாகம் கக்கும் மணியின் கீர்த்தியை முழக்கி-சிறு நாக்குப் பூச்சியின் நாக்கா பாடும்?