பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவிய மாந்தர்கள்அறிமுகம் * 121 -தன் கைம்மாலையை-வெள்ளைக் கைம்மாபோல்-ஆங்கு கொலுவிருந்த-பாண்டு கழுத்தினில் போட்டாள்! (I-பக்.96-98) குந்தியின் இந்த நீளமான அறிமுகம் போர்’ அடிக்கா மல் சில சொல் விளையாட்டுகள் நம்மை முறுவலிக்கச் செய்துவிடுகின்றன. 15. மாத்திரி. இவளைப் பற்றிய அறிமுகமும் இன்றியமையாதது. இவள் மத்திர தேசத்து மன்னவன் சல்லியனின் சகோதரி. பாண்டுவிற்கு இரண்டாவது மனைவியானவள். இவளைப்பற்றிய அறிமுகம் இது. சல்லியனின் சகோதரி மெல்லியலாள் மாத்திரி!-அவள் பொன்னவிர் மேனியில் புறப்படும் வெளிச்சத்தில் பகலாய் மாறும்- - ராத்திரி! அவள் நீலோற்பல நேத்திரி !-அந்த நேத்திரம் இரண்டும் நெய் நெருப்பின்றி-எரியும் பூத்திரி! அவள்! பொறையும் நிறையும் பீஷ்மனுக்குப்