பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 : பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு பறவையைக் கறவையைப் பார்த்தவாறே-அந்த வண்ண மணிப்பிள்ளைவிரல் சூப்பும்! அதுபிள்ளையல்ல; பிறப்பெடுத்த பேரறம்! என்றுகறவையும் பறவையும் கரம் கூப்பும்! ரிஷிகளும்ரிஷி பத்தினிகளும்'அறந்தான் சேய்!” என்றுஅள்ளியெடுத்துக் கொஞ்சினர்; அங்ங்ணம் கொஞ்சுவதில் அன்னை குந்தியையும் அத்தன் பாண்டுவையும் அவர்கள் மிஞ்சினர்! ஆவின்பால்; ஆட்டின் பால்; புடவைத் தலைப்பால் முகம் மறைத்துத் தாய் கொடுக்கும் தலைப்பால் எனப்படும் தாய்ப்பால்... ஆக அனைத்தும் பருகி அன்றாடம் வளர்ந்தது. காலனின் காமத்துப்பால் ஆக்கியளித்த அறத்துப்பால்! (I-பக்120-22) இந்த அறிமுகம் தேனும் பாலும் கன்னலும் அமுத மும் கலந்து பருகும்போது நாம் பெறும் சுவையையும் விஞ்சும்படி செய்துவிடுவதை அநுபவித்து மகிழ்கின்றோம்!