பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xiii திருப்பதிக் குடையின் தெய்வீகத்தை-ஒரு நாய்க் குடை கூறியா நானிலம் அறியும்?-நிலத்தைப் பேர்க்கும் ஈட்டியின் பெருமை ஈதென-ஒலை ஈர்க்குப் பேசியா ஊர்க்குப் புரியும்? எனத் தன்னடக்கமாகக் கூறும்போதும் அற்புதமாகச் சொல் வீச்சு வெளிப்படுவதை ஆசிரியர் அழகாக எடுத்துக்காட்டு கிறார். பழமொழி ஆட்சி, சொல்-பொருள் நயப்பகுதிகள், மரபுத் தொடர்கள் எனத் தலைப்பிட்டு ஆசிரியர் கவிஞர் வாலியின் பன்முகப்பட்ட கவிதைச் சிறப்புகளைப் புலப்படுத்துகிறார். சான்று இதோ: ஞாயிறு வனப்பை தரையில் பூத்த திங்கள் கண்டது அதன் செவ்வாய் வியந்து 'அடடா அற்புதன் என்றது அந்த- - வியாழன் நிகர்த்த-துர் வாசன் அருளால்-சொக்க வெள்ளி நிகர்த்த-ஒரு வெளச்சம் பளிச் சென சனித்து நின்றது, ஒப்பின்றித் தனித்து நின்றது அடுத்துவரும் இயல் பாண்டவர் பூமியில் இடம் பெற்றுள்ள கிளைக்கதைகளை விளக்குகிறது. அதனை அடுத்துவரும் இயல் பாண்டவர் பூமியின் ஒன்பான் சுவைகள்