பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 : பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு பகவானைப் பிரார்த்தித்துபிள்ளையைப் பெறுக! இங்ங்ணம். பாண்டு வேண்ட-குந்தியின் பச்சாதாபத்தைத் தூண்ட. மாருதத்தை அழைத்தாள்மந்திரத்தைச் சொல்லி; யாதவர்மரபில் வந்துதித்தமாணிக்கவல்லி! காற்றுக்கான பிரார்த்தனைகாற்றுவாக்கில்ககனத்திற்குச் சென்றது; கால் வந்துகுந்தியின் முன்னேகால்கொண்டு நின்றது! வேண்டினாள்-தான் விரும்பிய வரத்தை; காலின் காலடியில்கவிழ்த்தாள் சிரத்தை! அவளை அன்போடு ஆதரத்தோடு, தொட்டது காற்று; அடிவயிறெனும்-ஊன் வயலில்-மெல்ல நட்டது காற்று! காற்று நட்ட நாற்று. பீமனாக விளைந்தது; பாண்டு பட்ட கவலையைக் களைந்தது! மாதாவின்மடியிலிருந்து