பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூலமுகம என்கண்ணை மறந்துஉன்இரு கண்களையே என்அகத்தில் இருத்திக் கொண்டு நின்கண்ணால் புவியெல்லாம் நீஎனவே நான்கண்டு நிறைவு கொண்டு வன்கண்மை மறதியுடன் சோம்பர்முதல் பாவம்எல்லாம் மடிந்து நெஞ்சில் புன்கண்போய் வாழ்ந்திடவே கோவிந்தா! எனக்கமுதம் புகட்டு வாயே!' -பாரதியார் 'கவிஞர் வாலியின் அவதார புருஷன்-ஒரு மதிப்பீடு' என்பதைத் தொடர்ந்து கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு என்ற என் நூல் தமிழுலகத்திற்குப் 'பிரவேசம்' ஆகிறது. முன்னது இராமனது மெய்யைத் திறனாய்ந்தது பின்னது கிருட்டிணனது 'பொய்யைத் திறனாய்கின்றது. இரண்டுமே நமக்குத் தஞ்சம் என்பது வைணவ சம்பிரதாய நம்பிக்கை. கண்ணனைப் பற்றிப் பாரதியார் கூறுவது: பிறந்தது மறக்குலத்தில்-அவன் பேதமற வளர்ந்ததும் இடைக்குலத்தில் ' கண்ணன் அம்புலிக் குலத்தில் பிறந்தவனாயினும் வளர்ந்தது ஆயர்கள் நடுவே ஆயர்பாடியில். அவன் 1. பா. க. தோ. பா. கோவிந்தன் பாட்டு3 2. கண்ணன் பாட்டு-கண்ணன் என் தந்தை-4