பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவிய மாந்தர்கள்அறிமுகம் * 165 செம்பட்டை அவன்கால் முளைத்துகாடு நடக்கும் கரிக்கட்டை! கரியை-தன் கரிய நகத்தால்-காய் கறியைப் போல் நறுக்குவான்; அரியை-தன் அனல் மூச்சால்-அடுப்புக் கரியைப் போல் கருக்குவான்; ஆளிகளை-தனது அக்குளில் வைத்து-அதக்கித் துளிகள் ஆக்குவான்; செயிர்மிகு-கருஞ் சிறுத்தைகளின் வால்சுழற்றி உயிர்களைப் போக்குவான்! மண்புழுவாய்த் தெரிவான்; மலைப்பாம்பாய் விரிவான்; மறைவான்; கண்ணில்நிறைவான்; நிறையமாயங்கள் புரிவான்; (1-பக்.290-91) இவ்வாறு இடிம்பனை நமக்கு வாலியார் அறிமுகம் செய்து அவனை நம் மனக்கண்முன் நிறுத்துவார். 34. இடிம்பி இவளை நமக்கு அறிமுகம் செய்வது காவிய ஒட்டத்துக்கு இன்றியமையாதவள் என்பதால்! இத்தகுஇடிம்பனுக்கு-ஒர் இளையவள் உண்டு; இடிம்பி என்று!