பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xviii 'காரட் மாற்று கண்ட இந்த ஆற்றுப்படை நூலுக்கு அரியதோர் அணிந்துரை வழங்கிச் சிறப்பித்தவர் பேராசிரியர் டாக்டர் வா. ஜெயதேவன் (பேராசிரியர்துறைத்தலைவர் தமிழ் மொழித்துறை) அவர்கள். இவர் 1975-இல் நான் வல்லுநர் குழுவில் இருந்தபொழுது விரிவுரையாளராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர். அதன் பிறகு நான் 1978-இல் திருப்பதியில் ஒய்வு பெற்றுச் சென்னை வந்தபிறகு என்னுடன் நெருங்கிப் பழகியவர். இலக்கியத்துறையில் நான் வாழ்நாள் மதிப்பியல் பேராசிரியராகப் பொறுப்பேற்றபிறகு இவருடன் மேலும் பழக்கம் நெருக்கமாயிற்று. படிப்படியாக இவரும் தம் உழைப்பின் காரணமாக துணைப் பேராசிரியர், என்று உயர்ந்துள்ளார். இவர்தம் சமத்துவ குணம் என்னை மிகவும் கவர்ந்தது. எவருடனும் இன்முகத்துடன் பழகும் பெற்றியர். அதிர்ந்து பேசார். விதிகட்குப் புறம்பாக யார் நடந்தாலும் சீற்றத்துடன் எதிர்ப்பவர். இத்தகைய நல்லவர், வல்லவரின் அணிந்துரை பெற்றது இந்நூலின் பேறு; ஏன்? என் பேறுங்கூட. அணிந்துரை நல்கிய அரிய நண்பருக்கு என் இதயங்கனிந்த நன்றி என்றும் உரியது. திருவரசு புத்தக நிலையத்தார் இந்நூலின் கைப் படியை அன்புடன் ஏற்று சிறப்புடன் வெளியிட்டமைக்கு அடியேனின் நன்றி என்றும் உரியது. பாண்டவர் பூமிக்கு ஆற்றுப்படை போல் அமைந்த இந்தத் திறனாய்வு நூலுக்கு தமிழ்கூறும் நல்லுலகில் நல்ல வரவேற்பு இருக்கும் என்பது அடியேனின் அதிராத நம்பிக்கை. எண்பத்தாறு அகவை வரையிலும் தமிழ்த் தொண்டு புரிவதற்காகவே இவ்வுலகில் நல்ல உடல் நலத்துடனும் கண் ஒளியுடனும் அடியேனை வைத்திருக்கும் வேங்கடம் மேவிய விளக்கு-'அகலகில்லேன் இறையும் என்று