பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவிய மாந்தர்கள்அறிமுகம் * 181 அல்லி என்றவுடன் அல்லிதர் பார்’ என்ற பொதுமக்கள் பேச்சில் அடிபடும் தொடர் நினைவிற்கு வருகிறது. பெண்கள் ஆட்சி என்பது இதன் பொருள். அல்லி என்பது பெண்களைக் குறிக்க உருவகமாகின்றது. அல்லிதர்பாரைப்பற்றி ஏணி ஏற்றம் என்ற ஒரு மக்கள் காவியத்தைப் படித்தது (1958) நினைவிற்கு வருகின்றது. கவிஞரின் கற்பனையை உள்ளுந்தோறும் உவட்டாமல் இனிப்பதை அறியலாம். ஆற்றுமணலை எண்ண முடிந்தாலும் அர்ச்சுனனின் மனைவிமார்களை எண்ண முடியாது என்பது மக்கள் வாக்கில் அடிபடும் பழமொழி. வனவாச காலத்தில் இவர்களையெல்லாம் அர்ச்சுனன் அல்லியின் பாதுகாப்பில் விட்டுச் சென்றதாகக் கவிஞரின் கற்பனை. அன்றியும் இந்த அல்லியின்மீது துரியோதனனுக்கு ஒரு கண் இருந்தது. வனவாச காலத்தில் அல்லியை மோப்பம் பிரித்துப் பார்க் கலாம் என்ற நப்பாசையுடன் துரியோதனன் பாண்டி நாட்டு மதுரைமாநகர் போந்து அல்லியின் அரண்மனையருகில் வட்டமிடுகின்றான். அல்லியின் இரகசியக் காப்பாளர்கள் துரியனைக் கைது செய்துவிடுகின்றனர். - கைது செய்தவனை ஒரு மந்திர ஏணியில் விடுவித்துக் கொள்ள முடியாத நிலையில் வலுவாகப் பிணித்து விடுகின்றனர். அதில் அடியிற்கண்ட வாசகம் கொண்ட அறிக்கையையும் பொருத்தி விடுகின்றனர். "இதனால் சகல மகளிருக்கும் தெரிவிப்பதாவது: மகாராஜ ராஜஸ்ரீ அத்தினபுரத்து அரசனான துரியோத மகாராஜர் மகளிரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதனால், இதனைக் கண்ணுறும் மகளிர் யாவரும் வாயில் வெற்றிலை பாக்கு அதிகமாக போட்டுக் குதப்பி அவன் முகத்தில் உமிழ வேண்டியது. மதுரையில் இப்பணி