பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 & பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு இவனது இருப்பை ஏற்றிருந்தன-இரு கருப்பை ! ஒரு தாய் கருவில்- אי ஒரு சில நாளிலிருந்து-பின் மறுதாய் கருவிற்கு மாறியவன்; ஆம்! தேவகி வயிற்றில்-சில திங்கள்க ளிருந்து-பின் ரோகிணி வயிற்றில்-ஒரு ராத்திரியில் குடியேறியவன் ! " ‘அண்ணன் அஞ்சுதலை நாகத்தின் அசசு; அவன நெஞ்சு கொதித்தால் நாவால் உமிழ்வான் நச்சு (II-பக்.5859) இவனும் இலக்குவனும் ஆதிசேட அம்சமாதலால் இருவர் மூக்கின் நுனியிலும் கோபம் குதிக்கத் தயாராக உள்ளது. இராமகாதையில் நம்பியாயிருந்து தம்பியின் சினத்தை அடக்கி, ஈண்டுத் தம்பியாயிருந்து நம்பி (மூத்தபிரானின்)யின் கோபத்தைத் தணிக்கின்றான். இந்த அறிமுகத்தில் வம்சம்-அம்சம், நம்பி தம்பிதம்பி நம்பி என்ற இணைகள் நயமாக அமைந்து நனிசிறக்கின்றன. 15 இக்கால அறிவியல் கருத்துஅஃதாவது ஒரு பெண்ணின் கருப்பையில் வளர்ந்து வரும் கருவுற்ற முட்டை மற்றொரு பெண்ணின் கருப்பைக்கு மாற்றப்படுவதை நினைவுகூரச் செய்கின்றது. இவ்வாசிரியரின் 'வாழையடி வாழை பக்.272 காண்க. மணிவாசகர் நூலகத்தில் (சென்னை. 108) கிடைக்கும்.