பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவிய மாந்தர்கள்அறிமுகம் * 191 என்று குறிப்பிடுவர். வாலியாரும் பிரிதோர் இடத்தில் ஜயன், விஜயன் என்ற துவாரபாலகர்கள் துருவாசரிடம் பெற்ற சாபங்களைக் கூறி அதற்கு விமோசனம் சிசுபாலன், கம்சனுடன் இவர்கள் இறப்புடன் முடிவு பெறுவதாக விளக்குவார். (I-பக்:103-04) 44. துச்சாதனன். இவனும் போகிற போக்கில் அறிமுகம் ஆகிறான். சூதாட்டத்தில் ஐவர் தோற்றதும் ஐவரின் மனைவி பாஞ்சாலியை அவைக்கு இட்டுவர துச்சாதனனை அனுப்பும்போது அறிமுகம் ஆகின்றான். - அவன் ஆறறிவு அமைந்த அஞ்சறிவு; அந்த அஞ்சறிவும் நஞ்சறிவு! அவன் பிரஜாபதி உடைய பேடு; அவனுக்குக் கேடயம்; கத்தி-ஒரு கேடு! அவன் மாடுதின்னும் மாடு; பன்றி தின்னும் பன்றி, அவனுக்குக் கைகால் ஓடாது கள்; கசாப்பு இவை இரண்டும் இன்றி! நல்ல நூல்நடை ஓராத-அந்தக் கால்நடை-காந்தாரியெனும்