பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவிய மாந்தர்கள்அறிமுகம் * 197 பாண்டவர் நால்வரும் பக்கத்துணையாய் வர விராடன் விரைகிறான் தேரில் போரிட சுதர்மனைச் சந்திக்கின்றான். அவனால் அடிபட்டு அடிமையாகின்றான். விரைவில் சுதர்மனைக் கொன்று மன்னனை விடுவிக்கின்றான் வீமன். கதையோட்டத்திற்கு இவன் அறிமுகம் தேவைப்படுகின்றது. 47. உத்தரை கதைக்கு மிகவும் இன்றியமையாத பாத்திரம். ஆகவே இவளைப் பற்றியும் அறிமுகம் ஆக வேண்டியதாகின்றது. விராட மன்னனின் புத்திரி. இவள் அறிமுகம் இதோ: அரசனுக்கும் அரசிக்கும்..... உத்தின் என்றொரு புத்திரி ! (I-பக்.255) தேட்டின் கதை.... உத்தரை! உத்தரைக்கோர் உவமையைக் கண்டதில்லை இத்தரை! சித்தரை, சீவன் முத்தரை சித்தம் சிதறிய பித்தரைப் போல்-உன் மத்தரைப் போல்... ஆக்கவல்லார்-அவ் அரம்பை மேனகை! அவர்களும் வாய்க்கவில்லை-உத்தரையின் வாய் வழங்கும் பூநகை! அந்த அரசிளங்குமரி.