பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவிய மாந்தர்கள்அறிமுகம் * 213 கதை சொல்லும் சேதி நாம்கற்க வேண்டிய நீதி!' எனறு உரைத்துவிட்டுவிடைபெற்றான் சல்லியன்; (11-பக்.320-21) 54. உலூகன் இவன் ஓர் புரோகிதன். துரோபதை தகப்பன் பாஞ்சாலனால் துதாக அனுப்பப் பெற்றவன். அவன் அரசவையை வணங்கி செய்தி கூறுகின்றான்:

  • அறம்- -

அநாதியானது; அதன் ஆறறல அலாதியானது! அறத்தை அச்சாணியாகக் கொண்டுதான் அம்புவித்தேரின் ஆழி சுழலுகின்றது; அந்த அச்சாணி-ஒர் அச்சானியமாய் அகலுமாயின் ஆழி கழன்று அம்புவித்தேர் அதோ கதி அமையுமென ஆரணம் கழறுகிறது! மாறக்கூடியது; மாற்றம் உடையது: தரணியின் தட்பவெப்பம்! மாறாதது; மாற்றமுடியாதது; தருமத்தின்திட்பம் நுட்பம்! 19 வாலியார் காவியத்தில் இவன் பெயர் இல்லை. வில்லியின் காவியத்திலிருந்து இடமறிந்து ஈண்டு பெயர் குறிப்பிடப் பெற்றது.