பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவிய மாந்தர்கள்அறிமுகம் * 215 இரந்துதான் பெறவேண்டும்என எண்ணாதீர்; அதை நீங்கள்இறந்துதான் பெறவேண்டும்எனப் பண்ணாதீர்! (I-பக். 322-24) இங்ங்னம் சொல்லி முடிக்கின்றான் தனது தூதுச் செய்தியை. 55. சஞ்சயன். இவன் இரு கண் இல்லாத அரசனுக்கு அணுக்கத் தொண்டன். வெளியுலகில் நடைபெறும் நிகழ்ச்சிகளை அவ்வப்போது அரசனுக்குப் பதிவு செய்யும் பதிவாளன்! துரியனிடமிருந்து பாண்டவர்கட்கு துதாக வந்தவன்; விழியிலா வேந்தன் உலுகன் என்ற வேதிய னிடம் தான் சஞ்சயனைத்துதாக அனுப்புவதாக இருக்கும் கருத்தைத் தருமனிடம் தெரிவிக் குமாறு சொல்லி அனுப்பினான். பின்னர், சஞ்சயனைத் தனியிடம் இட்டுச் சென்று வார்த்தைகளால் அவனுக்கு வெண்சாமரம் வீசினான். "என் பிள்ளைகளும் எம்பியின் பிள்ளைகளும் உன் சொல்லைத் தட்ட மாட்டார்கள்', 'என் மகன் தருமனுக்கு ஊசிமுனை யளவும் உதவேன்' என்று உறுமுகின்றான். நீ தருமனிடம் பேசிப் போர் வராமல் தடு" என்று சொல்லுமாறு வேண்டுகின்றான். மேலும், "நாட்டரசின் மேல் உள்ள நசையை விடுத்து வீட்டரசின் மேல் உளம் வைத்திடுமாறு. அவர்களுக்கு-ஒர் ஆலோசனை கொடு! தருமனுக்கும்-அவன் தாரம் தம்பியர்க்கும்