பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்-4 | அணிநலன்கள் ] கவிதைக்கு அழகு செய்வன அதில் அமையும் அணிகள். ஒரு கருத்தை மொட்டையாகப்-பட்டவர்த் தனமாகச்-சொல்வதைவிட அழகாகச் சொல்வது கேட்போருக்கு இன்பம் பயக்கும். அணிகள் யாவற்றையும் உவமையின் விகற்பங்களாகவே கருதுவர். உவமம் (Simile) என்ற ஓர் அணியினின்றே எல்லா அணிகளும் தோன்றின என்பது பேராசிரியர் போன்ற பண்டைத் தமிழறிஞர்களின் கருத்து. இது கருதியே தொல்காப்பியரும் அணிகளுக்கு அடிப்படையாகவுள்ள உவமை என்ற ஒன்றினை மட்டிலும் விளக்கும் போக்கில் உவம இயல் என்ற ஒன்றிற்கு மட்டிலும் இடம் அளித்தார். உவமையினின்றே ஏனைய அணிகள் தோன்றின என்பதை, உவமை என்னும் தவலருங் கூத்தி பல்வகைக் கோலம் பாங்குறப் புனைந்து காப்பிய அரங்கில் கவினுறத் தோன்றி யாப்பறி புலவர் இதயம் - நீப்பறு மகிழ்ச்சி பூப்ப நடிக்குமே என்ற வடமொழி அப்பைய தீட்சிதரின் சித்திர மீமாம் சைக் கூற்றினாலும் அறியலாம். உவமத்தொகை உவமை நன்கு பயன்படுத்தப் பெற்ற பிறகு உவமையில் குறுக்கம் தோன்றத் தொடங்கியது. இக்குறுக்கத்தையே இலக்கண நூலார் உவமத்தொகை என்று வழங்குகின்றனர். போல, புரைய' என்ற உவம 1 செந்தமிழ்-தொகுதி-7 பக். 14