பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 : பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு யால் கவிதை பெறும் பயன் பெரிது. கவிஞன் ஒரே கல்லில் அனைத்தையும் பெற விழைகின்றான்; திறமை மிக்க கவிஞனாயின் அதில் வெற்றியையும் பெற்று விடுகின்றான். மன்னர் விழித்தா மரையூத்த மண்டபத்தே பொன்னின் மடப்பாவை போய் புக்காள்' என்ற அடிகளில் தமயந்தி, சுயம்வரம் நாளன்று ஐம்பத்தாறு நாட்டுமன்னர்களும் நளன் உருக்கொண்டு வந்திருந்த நான்கு தேவர்களும் பிறரும் விழிக்கண் இமையாது காத்திருக்கும் கொலு மண்டபத்திற்கு வருவதைப் புகழேந்தி வருணிக்கின்றான். இதில் விழித்தாமரை பூத்த மண்டபம் என்ற உருவகத்தில் காட்டும் காட்சியினை எண்ணி எண்ணி மகிழலாம். கரும்புச்சாறு திரண்டு பாகாகிக் கற்கண்டு நிலையைப் பெறும் பொழுது கற்கண்டு சுவைமிகுந்து காணப் பெறுவது போலவே, உவமையும் சுருங்கி அடங்கி உருவகமாக வெளிப்படுங்கால் அந்த அடக்கத்தில் புதிய ஆற்றலும் சுவையும் பிறப்பது விந்தையாகும். இந்த உவமை உருவகங்கள் பாரதிபாரதிதாசன் கவிதைகளில் புதுக்கோலங்கள் கொண்டு புதுமெருகு பெற்றுப் பொலிவதைக் காணலாம். இவை இக்காலப் புதுக்கவிதையில் தனித்தன்மை வாய்ந்த புதுவகை உவமஉருவகங்களாக அவதாரம் எடுப்பதைக் கண்டு மகிழலாம். இனி, கவிஞர் வாலியின் புதுக்கவிதையில் அமைந்தபாண்டவர்பூமியில் உவம உருவகங்களைக்காண்போம் செந்தனு தாங்கும் சந்தனுவை புகழ்வாசம்-சந்ததம் வீசும்சந்தனவத்தி என்றும், வானதிப் பெண்ணை நெஞ்சைச் சுடும் நெருப்பு வல்லி என்றும், சேலை கட்டும் கருப்பு வில்லி என்றும் உருவகிக்கின்றார். அசுரர் குலத்து அரசன் விருஷபாலனையும் அவன் மகள் சர்மிஷ்டையையும் அறிமுகம் செய்யும் பாங்கில் வருவது: 3 நளவெண்பா-131