பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிநலன்கள் : 225 துடைக்கு உவமை தூண்; இடைக்கு உவமை இறை! ஏனெனில்... இதைப் பற்றித்தான்'இலது உளது’ س6f6.jT இரைகிறது உலகு! (1-பக். 85-86) இப்பாடற்பகுதியில் 'வெண்கதிர்', செங்கதிர்', பெண்கதிர் இவை உருவகங்களாக நின்று பிருதையைச் சுட்டுகின்றன. மண்கதிர், நதி’, ‘சாரை, தூண், இறை என்பவை உவமைகளாக அமைந்துள்ளன. சாதாரணமாக இடைக்கு உவமை உளதோ? இலதோ? என்று கூறி விடுவது வழக்கம். இறையை உண்டு என்பர் சிலர்; இல்லை என்பர் சிலர். இக்கருத்தை இடைக்கு ஏற்றிக் கவிஞர் வாலி கூறுவது அற்புதம், இஃது அவர்தம் தனித்தன்மையைப் பறைசாற்றி நிற்கின்றது. 1. உவமைகள் ஏழ்மை தீர்க்கும் தோழமை தேடி துருபதனை நோக்கி வரும் துரோணன் பழைய நினைவுகளை எண்ணி வரும் நிலையைக் கவிஞர் வாலி கூறுவது: இளையராய் இருந்த காலத்தில் இருவர்க்கிடையே இயல்பாய் எழுந்த நட்பை இந்நாளில் எண்ணி எண்ணி இளகினான்; தனது மன விட்டின் புழைக் கடையில்