பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிநலன்கள் : 229 கர்ணனின் கவச குண்டலங்களைக் கவர்வதற்கு இந்திரன் அந்தணன் வடிவில் வந்த நிலையைக் கவிஞர் வாலி கூறுவது இப்பகுதி: பஞ்சம்பஞ்சக் கச்சம் கட்டி வந்தாற்போல்வந்தனன்! ●●●牵**-**我****-* வறுமையும் வரிவளியாக... - வருத்தம் தோய-பாடிய விருத்தம் போலே-அவனது விருத்தம் இருந்தது; அந்தவிருத்தம் வழங்கிடும்அருத்தம் போலேஅவன் நடையில் நிருத்தம் இருந்தது! (1-பக் 230) பஞ்சம் வறியவனைக் குறிக்கும் உருவகம். பஞ்சக் கச்சம் கட்டி வந்தாற்போல் என்பது உவமை. காரிகை கற்றுக் கவிபாடுபவர் சிரமப்பட்டு வரிவரியாக விருத்தப் பாடல் எழுதுவர். அதனைக் கிண்டல் செய்கின்றார் வாலியார். அவனது விருத்தம் என்பது உடலில் வரிவரியாக உள்ள தசைச் சுருக்கத்தைக் குறிக்கின்றார் போலும் விருத்தப் பாடல் சரியாக அமையாவிடில் அதன் பொருள் தள்ளாடும்; அல்லாடும். அதுபோல அவன் நடையிலும் 'ஆட்டம்-நடன ஆட்டம் இருந்தது என்பதாகக் குறிப்பிடுவது அற்புதம்! இந்திரன் அந்தணன் வேடத்தில் வந்து கர்ணனிடம் யாசித்தது போல் கர்ணனும் பார்ப்பன கோலம் கொண்டு பரசுராமனிடம் சென்று தனுர்வித்தையை வாசித்தான்.