பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 : பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு இவ்விடத்தில் பாரதியார் பாஞ்சாலி சபதத்தில் இதே சந்தர்ப்பத்தில் வைக்கும் உவமைகளையும் கருதலாம். வேள்விப் பொருளினையே-புலைநாயின் முன் மென்றிட வைப்பது போல், நீள்விட்ட பொன்மாளிகை-கட்டிப் பேயினை நேர்ந்துகுடி யேற்றல் போல் . ஆள்விற்றுப் பொன் வாங்கியே-செய்த பூனையோர் ஆந்தைக்குப் பூட்டுதல் போல." ஈண்டும் புதியதும் மரபும் போட்டி போட்டுக் கொண்டு நிற்பதை அறியலாம். - இருவரின் சிந்தையின் மனஓட்டத்தையும் எண்ணி மகிழலாம். 2. உருவகங்கள் உருவகங்களே வாலியாரின் கவிதையில் அதிக இடம் பிடித்துள்ளதைக் காணமுடிகின்றது. பாண்டு மரித்த அவலம் சிறிது சிறிதாகக் கரைகின்றது. விருந்தினர்கள் அத்தினபுரிக்கு வரத் தொடங்குகின்றனர். இதனை வாலியார் தொடங்குகின்றார் கண்ணன் தேரில்கண்ணனும் வந்தான்; கண்ணனின்அண்ணனும் வந்தான்! பகலும் இரவும்பக்கத்துப் பக்கத்துஇருக்கையில்இருக்கையில்... 4 பாரதியின் பாஞ்சாலியின் சப்தம்-நான்காவது-துகிலுருதல் சருக்கம்-245