பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிநலன்கள் & 245 தொடர்ந்து அவனைப் பற்றிய மேலும் சில உருவகங்கள்: கன்னன் பிறந்து விடுகின்றான்-கன்னி குந்திக்கு. கட்டைவிரல் சூப்பும்குட்டைச் சூரியனை. கைகால் முளைத்திருக்கும்வைகாசி வெய்யிலை... அழகைக் கக்கிச் சிரிக்கும்அக்கிப் பிஞ்சை... (1 பக் 214-5) 'குட்டைச் சூரியன்', 'வைகாசி வெய்யில்', 'அக்கிப் பிஞ்சு-இவை கன்னனைக் காட்டும் உருவகங்கள். கன்னனின் கனவில் வந்த ஆதித்தனை-அவன் அச்சனை-வாலியார் கூறுவது: வான வாவியில்விடியலில் விகசித்துபிரகாசத் தேனைப் பிலிற்றுகின்றநெருப்புநிரஜமே! விசும்பில்விற்றிருந்தபடியேபசுமபுலபணியைத் துடைக்கநாளும்நீளும் கரமே! எண்ணெயூற்றாமல்எரியூட்டாமல்விண்ணில் எரியும்மாயத்திரியே!