பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 இயல்-5 சொல்லாட்சிச் சிறப்பு சொற்கள் கருத்துகளை உணர்த்தும் குறியீடுகள். ஐ. ஏ. ரிச்சர்ட்ஸ் என்பார் ஒரு சொல்லுக்கு வெவ்வேறான நான்கு பொருள்கள் இருப்பனவாகக் குறிப்பிடுவார்.' அவற்றை அவர் கருத்து (Sense), உணர்ச்சி(Feeling), தொனி (Tone) உள்நோக்கம் (intention) என்று முறைப்படுத்தி ஒதுவர். கருத்து என்பது பேசுவோர் கூறுவது; அது பொது அநுபவத்தில் இருப்பதை அல்லது நிகழ்வதைக் குறிக்கும். அஃது அறிவு நிலையைச் சார்ந்திருக் குமேயன்றி உள்ளக்கிளர்ச்சிகளைச் சார்ந்திராது. அதை ஒருவித 'மனச்சுட்டு என்றுகூடக் கருதலாம். பேசுவோர் கையா ளும் சொற்கள் அவர் எண்ணிக்கொண்டிருக்கும் கருத்தி னையே கேட்போரையும் எண்ணுமாறு சுட்டுகின்றன. கேட்போர் புரிந்துகொண்டால் கருத்து கடத்தப்பட்டு விட்டதாகக் கருதலாம். பேசுவோரும் தம் நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டார் என்று நினைக்கலாம். உணர்ச்சி என்பது அகவயமானது. (Subjective); உட் பகுதியைச் சார்ந்தது. அது கருத்தினைத் தழுவியிருப் பினும், அதனின்று எளிதாகப் பிரித்தறியக் கூடியது. வண்ணப் படங்கள் அணி செய்யும் நூலொன்றினுக்கு மதிப்புரை எழுதுவோர், "படங்களை நோக்க இந்நூலை எவரும் விரும்பி ஏற்பர்; நூற்பொருளை நோக்க எவரும் புறக்கணிக்கவே செய்வர்” என்று கூறினால் அவர் நூலாசிரியர்தம் கருத்தை வெளியிடுவதில் வெற்றி 0%trañari -frí ercópl 3.525corrub. eormco, eouffgste 1 assrsists: The Practical Criticition pp. 79-88; 330-1, 353–7. Principles of Literary Criticition pp. 195-286