பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 & பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு ஒப்புதல்.ஈந்ததோர் ஒப்பந்தம்-இப்பொழுது ஒப்புக் கென்றானது; இப்பந்தம்-இக்கணமே இல்லையென்று போனது; நிர்ப்பந்தம் செய்யினும் நில்லேன், செல்வேன்! (1-பக். 14) ஒரேமாதிரியாகப் பிறந்த சொற்கள் ஒரிடத்தில் அமைந்து நம்மிடத்தில் உவகையை விளைவிக்கின்றன. தவிர, ஒப்பந்தம்-இப்பந்தம்-நிர்ப்பந்தம் என்ற இணைப்பு நம்மிடம் பந்தம் விளைவித்து பாப்பகுதியில் நம்மை ஆழங்கால் படச் செய்து மகிழ்விக்கின்றது. சத்தியவதியைச் சந்தனுவிடம் சேர்த்து வைக்கும் வாய்ப்பினைக் காட்ட விரும்பிய வாலியார் கூறுவது. சந்தனு மன்னனின் சளித்திரத்தில்.... தீர்த்தக் கரைகளே திருப்பு முனைகளைத் தீர்மானிக்கின்றன! நீளக் கிடக்கும்-ஏதோஒரு நீல நதிக் கரையில்தான் நிகழ்கிறது-அவனது நிச்சய தாம்பூலம்;. ஒருநாள் யமுனைக் கரையில்-சந்தனு உலா வருகையில்.... வழி நெடுக-சிறு வாடை வீசியது; வாடையில்-நறு வாடை வீசியது!