பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 : பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு ஆ எட்டு நாட்களுக்குப் பின் இமை மூடித் தூங்கினாள்! இங்கு தாயின் கண்கள் துயிலாடையைப் புனைந்தன அங்கு தனயனின் கண்கள் துயிலாடையைக் களைந்தன! (1-பக். 184) இந்த இரண்டு பகுதிகளும் இரண்டு இயல்களின் முடிவுகளைக் காட்டுபவை. முதலாவதில் பிள்ளை துங்குகிறான்; அன்னை விழித்திருக்கின்றாள். இங்கு போதை உறக்கத்தை விளைவிக்கின்றது; கவலை உறக்கத்தைத் தவிர்க்கின்றது. இரண்டாவதில் தாயின் கவலை நீங்குகின்றது; உறங்குகின்றாள். இங்கு தனயனின் போதை நீங்குகின்றது; உறக்கமும் ஒடுகின்றது. இரண்டையும் படிக்கும் நாம் கவிஞரின் கவிதைத் திறனைக் கண்டு மகிழ்கின்றோம், பாராட்டுகின்றோம். இயல்களின் முடிவுகளை சிறப்பாய் அமைப்பதை போல் இயல்களின் தொடக்கங்களையும் அற்புதமாய் அமையச் செய்யும் ஆற்றலை உடையவர் வாலியார், சொல் வீச்சிலேயே இதனைக் காணலாம். வீமனைக் காணாத நிலையைக் கூறும் இயலின் தொடக்கம் இது: நீர் விளையாட்டும் நிலாச் சாப்பாடும் முடிந்தபின்-இலேசாய் விடிந்தபின் நகரம் திரும்ப நிச்சயிக்கையில்தான்.... છે([5 கைவிரல்கள் நான்கும்